Breaking News

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: 

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிரித்து வருகிறது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வருவாய்த்துறையினர் சமுதாய கூடங்களையும் தனியார் மண்டபங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.


தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இரவு முழுவதும் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் எதிரொலியால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

செம்பரம்பாக்கம் அணையின் முழுக்கொள்ளளவு 25.55 அடி உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு தற்போது 21.22 அடியாக உள்ளது.

இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்துவிடுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், அதன் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


No comments

Thank you for your comments