பெட்ரோல் பங்கில் கூட்டுக் கொள்ளை முயற்சி... பங்க் ஊழியர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்கில் கூட்டுக் கொள்ளை அடிக்க முயற்சி... பங்க் ஊழியர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் ...
காஞ்சிபுரம் அருகே புறவழி சாலையில் கீழ்கதிர்பூர் பகுதியில் நயாரா என்ற பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் இந்த பெட்ரோல் பங்கிற்கு ஐந்து இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர். பெட்ரோல் பங்கில் படுத்திருந்த ஊழியரிடம் திருவண்ணாமலை பருவதமலை செல்ல வழி கேட்டனர். ஊழியர்களும் அவர்களுக்கு தெளிவான பதிலை அளித்தனர் .
திடீரென வந்திருந்த 5 பேரும் பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக துணிந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் என்ற பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்ட துவங்கினர்.
மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பெட்ரோல் பங்கை நோக்கி ஓடிவந்தனர். இதைக்கண்ட கொள்ளையர்கள் 3 பேர் ஒரு பைக்கில் தப்பிச் சென்றனர். மற்ற இருவர் தப்பி செல்லும் பொழுது ஊழியர்கள் மறித்ததில் பைக்கை விட்டுவிட்டு இருட்டில் ஓடி மறைந்தனர் .
பெட்ரோல் பங்கில் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் பங்கில் கொள்ளையடிக்க முயன்ற 5 நபர்களை தீவிரமாக தேடினர்.
வேகவதி பாலம் அருகே நின்றிருந்த மூன்று நபர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பெட்ரோல் பங்கில் ஐந்து பேராக வந்து கொள்ளை அடிக்க திட்டமிட்டது தெரியவந்தத.
அவர்கள் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் . இவர்களுக்கு கொள்ளையடிப்பது வாடிக்கையாக உள்ளதாத தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து 2 பைக்கை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் நகர் உட்பட மூன்று இடங்களில் பைக்கில் வந்த 5 கொள்ளையர்கள் பட்டா கத்தியை வைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தற்போது 5 கொள்ளையர்கள் கத்தியுடன் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பொது மக்களையும், வியாபாரிகளையும் பெரும் அச்சத்தில் தள்ளியுள்ளது.
காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ktamilnews

No comments
Thank you for your comments