Breaking News

‘வீர் சக்ரா’ விருது பெற்றார் அபிநந்தன்... தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை

வீர தீர செயல் புரிந்தததற்காக  ‘வீர் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22-11-2021) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The President, Shri Ram Nath Kovind presenting the Vir Chakra to Group Captain Varthaman Abhinandan, at the Defence Investiture Ceremony-I, at Rashtrapati Bhavan, in New Delhi on November 22, 2021.

இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் (தற்போது குரூப் கேப்டன்) அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்திய எல்லையிலிருந்து பாகிஸ்தான் எல்லை வரை பாகிஸ்தான் F-16 போர் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்தததற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

வீர் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் (தற்போது குரூப் கேப்டன்)  அபிநந்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments