கோவை அரசு மருத்துவமனை எலும்பு முறிவு அறுவை சிகிச்சையில் சாதனை
கோவை
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 4,190 நபர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.
மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக, கோவை அரசு மருத்துவமனை திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பல்வேறு புதிய சாதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த முடநீக்கியல் பிரிவு கடந்த 2017ம் ஆண்டு முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது.
விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு 6 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் மூலம் கொரோனா பேரிடர் காலத்திலும் தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பேரிடர் காலத்தில் 1,070 நபர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சாதனையை முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குநர் செ.வெற்றி வேல்செழியன், மருத்துவர்கள் முகுந்தன், மாரிமுத்து ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் நிகழ்த்தியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் வரை செலவாகும்.. எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.
No comments
Thank you for your comments