கிரிக்கெட் விளையாடியவருக்கு நேர்ந்த சோகம்..!
கோவை, நவ.23-
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம், காமராஜபுரம், 5 வது வீதியை சேர்ந்தவர் சூரியதினேஷ் (28). இவர் தனது தம்பி கவுதம்நவீன் (24) மற்றும் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட பச்சாபாளையம் அருகே உள்ள ரங்காபுரம் மைதானம் சென்றார்.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சூரியதினேசுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவுதம்நவீன் மற்றும் நண்பர்கள், அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினர். பின்னர் உடல் நிலை சீரானதாக சூரிய தினேஷ் நண்பர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் விளையாட தொடங்கினார். அப்போது அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரைமீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இவர் முன்னதாகவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் இறந்தது அவர் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments
Thank you for your comments