ஊராட்சி மன்ற தலைவர் பணியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!
திருவள்ளூர், நவ.28-
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி கிராமத்தில் தொடர்ந்து பல ஆண்டு காலமாக அங்கு உள்ள ஈசா ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவரை கண்டித்தும் ஏரியை ஒட்டி தனியார் பள்ளிக்கூடம் கட்டுவதைக் கண்டித்தும் ஊர் மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் வட்டாட்சியரிடம் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்த செய்தி பல செய்திகளும் வெளி வந்த நிலையில் தற்போது அந்த தனியார் பள்ளி பாதுகாக்கும் வகையில் தற்போது பெய்து வரும் மழை நீர் ஏரியில் செல்லாதவாறு கால்வாயை ஆக்கிரமித்து வருவதைக் கண்டித்தும் மழை நீரை ஆற்றில் விட்டு கடலில் கலக்க செய்வதை கண்டித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளவில்லை, மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் வெங்கடேஷ் வருவாய் ஆய்வாளர் சரவணன் கிராம நிர்வாக அதிகாரி ஷகிலா பேகம் பொதுப்பணி துறையினர் காவல் துறையினர் விரைந்து வந்து சமரசம் பேசி ஏரியில் நீரைத் தேக்கி வைக்க முயற்சி எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
தொடர்ந்து இதேபோல் மழைநீரை இயக்கினால் மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் எச்சரித்தனர்
No comments
Thank you for your comments