போலீஸ் உடையில் மதுபான ஊழியரிடம் 2 லட்சம் வழிப்பறி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் மதுபான கடையில் வேலை செய்பவர் பழனி. இவர் நேற்று இரவு தன்னுடைய மதுபான விற்பனையை முடித்துக் கொண்டு விற்பனை செய்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்திலுள்ள தன் வீட்டுக்கு சென்று உள்ளார்.
இவரது வீடு சோளிங்கரில் இருந்து லாலாபேட்டை ராணிப்பேட்டை செல்லும் வழியில் மெயின் ரோட்டில் அருகாமையில் உள்ளது. வீட்டின் அருகே செல்லும்போது, லாலாபேட்டையில் இருந்து சோளிங்கர் நோக்கி எதிரே வந்து போலீஸ் உடையில் இருந்தவர் பைக்கை நிறுத்தச் சொல்லி உள்ளனர். அதில் ஒரு நபர் போலீஸ் உடையிலும் மற்றொருவர் சிவில் உடையில் இருந்துள்ளனர்.
உடனே போலீஸ் உடையில் இருந்ததால் மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக பழனி பைக்கை நிறுத்தியுள்ளார். அதற்கு போலீஸ் உடையில் இருந்தவர் பழனியைப்பாத்து எங்கிருந்து வருகிறாய் என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டுள்ளார் அதற்கு பழனி பானவரம் டாஸ்மாக்கில் கடையில் பணி செய்தாகவும் என்பெயர் பழனி என்று கூறியுள்ளார்.
அதற்கு போலீஸ் உடையில் இருந்தவர், நீ வைத்திருக்கும் வண்டி திருட்டு வண்டி போல் தெரிகிறது என்று கூறியுள்ளார். அதற்கு மதுபான ஊழியர் பழனி இல்லை இந்த பைக் என்னுடையது எனது பெயரில் உள்ளது என்று இதற்கு உண்டான டாக்குமெண்ட் என் வீட்டில் உள்ளது வாருங்கள் காண்பிக்கிறேன் எனது வீடு அருகாமையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
இவர்களுக்கும் வீட்டிற்கும் 20 அடி தொலைவில் வீடு உள்ளது. வண்டியை தள்ளிக்கொண்டு வீட்டின் அருகே சென்று பைக்கை நிறுத்திவிட்டு பைக் பெட்டியில் இருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று பணத்தை வைத்து விட்டு வீட்டில் இருந்த வண்டி டாக்குமெண்டை எடுத்துவந்து காண்பிக்கலாம் என்று பைக்கில் இருந்த பணத்தை பழனி எடுத்துள்ளார்.
பையை பார்த்தவர்கள் போலீஸ் உடையில் உட்கார்ந்திருந்தவர் பின்னாடி உட்கார்ந்து இருந்த நபர் மதுபான ஊழியர் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி உள்ளார்.
அதற்கு மதுபான ஊழியர் பையை விடுங்க இதை ஏன் பிடிக்கிறீர்கள் என்று கூறுவதற்கு முன்பாகவே பின்னாடி உட்கார்ந்து இருந்த நபர் கத்தியை காட்டி கையில் இருந்த பணப்பையை வேகமாக பிடுங்கி கொண்டு வேகமாக பைக்கில் சென்று விட்டனர்.
கத்தியை பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் கத்தியுள்ளார். பழனி நிறுத்திய வைத்துள்ள வண்டியை எடுத்துக் கொண்டு செல்வதற்குள் அவர்கள் வேகமாகச் சென்று எங்கோ மறைந்து விட்டனர்.
உடனடியாக சோளிங்கர் காவல் நிலையத்தில் இது குறித்து பழனி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ். சோளிங்கர் காவல் ஆய்வாளர் சிவகுமார். வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments