பாலாற்றில் தவறி விழுந்த வாலிபரை இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்....
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பெரும்பாக்கம் பாலாற்றில் தவறி விழுந்த வாலிபரை இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு வார காலமாக வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த தாழ்வு மண்டலம் காரணமாக என மழை பெய்து காஞ்சிபுரம் பாலாறு மற்றும் செய்யாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலாற்றில் துவக்கமான பெரும்பாக்கம் கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் பணி நிமித்தமாக அருகிலுள்ள பாலாற்றை கடந்து வட இலுப்பை கிராமத்திற்குச் சென்று விட்டு திரும்புகையில் பெரும்பாக்கம் பாலாற்று தரைப்பாலத்தில் இருந்த பள்ளத்தில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் சந்தோஷ் என்பவர் அருகிலிருந்த தடுப்பை பிடித்து லாவகமாகத் தப்பினார் பச்சையப்பன் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் நேற்று இரவு முழுதும் தேடியும் கிடைக்காததால் பேரிடர் மீட்பு குழு உதவியை நாடினர்.
காலை முதல் பேரிடர் மீட்பு குழுவினர் தற்போது வரை வாலிபர் உடலை பல்வேறு இடங்களில் படகு மூலம் சென்று 10க்கும் மேற்பட்ட வீரர்கள் உடலை தேடி வருகின்றனர்.
இதேபோல் வாலாஜாபாத் பாலாற்று பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டி தவறி விழுந்து பாலாற்றில் இறந்தது சடலமாக மீட்கப்பட்டார்.ஒரே நாளில் இருவர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


No comments
Thank you for your comments