பீனிக்ஸ் புக்ஸ் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸில் பங்கேற்று சாதனை படைத்த கரூர் மாவட்ட மாணவிகள்...
கரூர்:
தமிழ்ச் செம்மொழி மன்றம் நடத்திய பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் தடம் பதித்து வெற்றி வாகை சூடி கரூர் மாவட்ட மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்ச் செம்மொழி மன்றம் மற்றும் பீனிக்ஸ் புக்ஸ் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் வெற்றி விழாவில் நேரடியாக பல்வேறு போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருர் மாவட்ட மாணவிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். தன்னை ஈன்ற தாய் தந்தைக்கும், பள்ளிக்கும், ஊருக்கும் (நாகனூர் காலனி) பெருமை சேர்த்துள்ளனர்.
வரலாற்றில் முதன் முறையாக கரூர் மாவட்ட அளவில் சாதனை படைத்த சாதனையாளர்களை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம், தமிழ்ச் செம்மொழி மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவபடுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments