பல்லாங்குழியான சாலை சீரமைப்பது எப்போது..?
திருப்பூர், நவ.22-
திருப்பூர் மாவட்டம் டாலர் சிட்டி எனவும் சுமார்ட் சிட்டி எனவும் பெயர் பெற்ற திருப்பூர் மாநகரத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், மாநகரத்திற்குள் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதனால் தாராபுரம் சாலையில் கோவில் வழி என்னுமிடத்தில் மூன்றாவதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
அந்த பேருந்து நிலையத்தில் தென் மாவட்டத்திற்கு செல்லும் மதுரை தேனி ராஜபாளையம் தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பேருந்துகள் அனைத்தும் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படுகிறது.
அதன் அருகில் பல்லடம் சாலை சந்திக்கும் ரோட்டில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் தண்ணீர் தேங்கிய நிலையிலும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
அவ்வழியில் மாநகர குடிநீர் தொட்டி அருகில் குப்பைகளையும் சாலையிலேயே கொட்டுகின்றனர். தற்போது பெய்துவரும் மழையால் அந்த சாலை மிகவும் மோசமான நிலைய அடைந்துள்ளன. குடிநீர் தொட்டியில் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
அவ்வழியில் வரும் பள்ளி மாணவ-மாணவிகளும், பனியன் கம்பெனிக்கு செல்லும் பணியாளர்களும் கடந்து செல்வதில் பெரும் அவதியுறுகின்றனர். சாலையில் துர்நாற்றத்துடன் குப்பகளை கடந்து செல்லவேண்டிய அவல நிலையே நீடிக்கின்றன... இதனால் அந்த சாலை வழியாக கடந்துசெல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்த சாலையை குப்பைகளை அகற்றி சீரமைத்து அங்கு ஒரு குப்பைத் தொட்டி அமைத்து தரவேண்டுமென அங்கு குடியிருப்போர் மற்றும் பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் மனவேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.



No comments
Thank you for your comments