Breaking News

பரமத்தி வேலூரில் கத்திரி விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு!

நாமக்கல், நவ.29-

கிராமப்புற விவசாய வேலை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் கத்திரி விவசாயிகளுக்கு தேவையான தொழில் ஆலோசனைகளை கல்லூரி மாணவர்கள் விளக்கிக் கூறினர். 



கோவை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி புலம் மாணவர்கள் கள ஆய்வு, களப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு வேண்டிய அறிவியல் மற்றும் தொழிலநுட்ப ஆலோசனைகளை பயிற்சி வகுப்புகள் மூலம், நாமக்கல் மாவட்ட பரமத்தியை அடுத்துள்ள  இராமதேவம் கிராமத்தை சேர்ந்த  பாலகிருஷ்ணன் என்பவரின் கத்திரி வயல்  சாகுபடியில், பின்பற்ற வேண்டிய ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விளக்கமளித்தனர். 

மேலும் இயற்கை பூச்சி விரட்டியான 3G கரைசல் பயன்பாடு பற்றியும் செய்முறை விளக்கமளித்தனர்.

இந்த பயிற்சி வகுப்பை  மாணவர்கள் செ.கலைஅமுதன், சி.மு.கமலசூரியன், இர.நவீன் குமார், வ.கு. கிஷோர், ச.குணால் ஆகியோர் நடத்தினர்.

இதனால் பயனுற்ற விவசாயிகள் மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.

No comments

Thank you for your comments