அராஜகத்தை கட்டவிழ்க்கும் திமுகவினர்? எழும் தொடர் குற்றச்சாட்டு...!
சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்...
திமுகவினர் என்றாலே அராஜகம், நில ஆக்கிரமிப்பு என்ற பிரம்மை உருவாகிவிட்டது... அதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்று முத்தமிழறிஞர் மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்க்கமாக கட்டுக்கோப்புடன் கழகத்தையும், அரசாங்கத்தையும் வழிநடத்தி வருகிறார்... ஆனால் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் மகன்கள், பிஏ&க்கள் என ஒரு சிலரால் அவ்வப்போது சர்ச்சைகள் உருவாகி வருகின்றது... இதுபோதாது என்று திமுகவினர்கள் சிலர் அராஜகத்தை கட்டவிழ்த்து வருகின்றனர்... சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது...
திமுகவினர் என்றால் அராஜகம் என்ற பிரம்மை பரவலாக உள்ளது... அதற்கு முக்கிய காரணம், காவல்நிலையம், அரசு அலுவலகங்கள், பத்திரப்பதிவு துறை அலுவலகம் என அனைத்து இடத்திலும் அதிகாரம் செலுத்துவார்கள் திமுகவினர்கள்... என்ற குற்றச்சாட்டு கடந்த காலமாக நிலவுகிறது... அதுமட்டுமின்றி திமுகவினர் என்றால் நில ஆக்கிரமிப்புகள் அதிகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் பலமாக உள்ளன. பல திமுக பிரமுகர்கள் மீது நில அபகரிப்பு வழக்குகளும், கைது நடவடிக்கையும் பாய்ந்தது...
இந்த பிரம்மை பலமாக உருவாக காரணம் மறைந்த முதல்வர் ஜெ... என்பதே நிதர்சனம்... “தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்” என்ற சர்ச்சை வரலாறும் உண்டு...
“தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்”
தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள் என்பது ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றவுடன் பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்திற்கான முழுத்தொகையைக் கொடுக்காமலோ அல்லது போலி ஆவணங்கள் தயாரித்தோ அல்லது மிரட்டியோ நிலத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்துக் கொள்ளல் அல்லது ஆக்கிரமிப்பு செய்து கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக 2006-2011 காலகட்டத்தில் (திமுக ஆட்சிகாலத்தில்) அதிகமாக நடைபெற்றதாக அதிமுக அரசு குற்றம் சாட்டியது. இப்படி நிலங்களை இழந்த நிலங்களின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் மேல் பதிவு செய்யப்படும் வழக்குகள், அதன் மீதான நடவடிக்கைகள் “தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்” என்று அழைக்கப்படுகின்றன.
நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக ஜூலை 10, 2011 அன்று தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை நிறுவியது. அதன்படி காவல் துறையில், தனியாக சிறப்பு பிரிவு ஒன்று காவல் தலைமை அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும்.
அதிமுக 2011 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் 'கருணாநிதியின் குடும்பத்தினராலும், திமுக அமைச்சர்களாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி, பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தது. இதன்படி அதிமுக தலைமையிலான அரசு 2011ஆம் ஆண்டு பதவியேற்றவுடன் பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைப் பற்றியதாகும். நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக ஜூலை 10 அன்று தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை நிறுவியது. அதன்படி காவல் துறையில், தனியாக சிறப்புப் பிரிவு ஒன்று காவல்துறையின் மாவட்டத் தலைமை அலுவலகத்திலும் தொடங்கப் பெற்று செயல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என பட்டியல் நீண்டது...
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனி பொதுமக்கள் சிலர் தங்களது நிலத்தை சிலர் மிரட்டி அபகரித்து கொண்டதாக திமுக பிரமுகர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 13 பேர் மீது புகார் செய்தனர்.
மதுரையில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் பறிப்பு புகார் தொடர்பான வழக்கில் திமுக பிரமுகர் கோ.தளபதி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி, வேங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி-பாப்பா தம்பதி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்ரா கர்க்கிடம் புகார் மனு அளித்தனர். அதில் திருமங்கலம் அருகே உள்ள தங்களது 5.14 ஏக்கர் நிலத்தை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மிரட்டி எழுதி வாங்கியிருப்பதாக கூறியிருந்தனர். திமுக பிரமுகர் கோ.தளபதி, திருமங்கலம் ஒன்றிய திமுக பிரமுகர் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் திமுக பிரமுகர் கிருஷ்ணபாண்டி, சுரேஷ்பாபு, எஸ்.ஆர். கோபி, உள்ளிட்ட 7 பேர் மீது புகார் கூறப்பட்டிருந்தது. நிலமோசடி வழக்கில் மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி மற்றும் அவரது மருமகன் பாண்டியனும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் மில் ஒன்றை அபகரித்தாக ஜே. அன்பழகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது..
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பெருந்துறையில் ராமசாமி, மலர்விழி தம்பதியின் நிலத்தை அபகரித்த வழக்கில் என்கேகேபி ராஜா, ஈரோடு முருகேஷ், விஸ்வநாதன் ஆகியோர் மீது புகார் எழுந்தது.
நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி போலீஸ் ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில் திருச்சியில் உள்ள ஓட்டல் காஞ்சனா தனக்குச் சொந்தமானது என்றும் அதை திமுக பிரமுகர் கே.என்.நேருவின் தூண்டுதலின்பேரில் சிலர் பறித்துக்கொண்டதாக கூறியிருந்தார்..
நாமக்கல்லை அடுத்த கீரம்பூரைச் சேர்ந்த வசந்தி போலி ஆவணம் தயார் செய்து தங்கள் நிலத்தை பறித்துக்கொண்டதாக புகார் கொடுத்த வழக்கின் காரணமாக திருச்செங்கோடு நடேசன் கைது செய்யப்பட்டார்.
பல்லடத்திற்கு அருகிலுள்ள அவினாசிபாளையத்திற்கு அருகிலுள்ள வெள்ளம்பட்டி ஊரிலுள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 15.16 ஏக்கர் நிலத்தை அபகரித்ததிற்காக திமுக பிரமுகர் ஏ எசு மணி மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்தது.
மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் மின்னல்கொடி காவல்துறையினரால் கைது செய்துப்பட்டுள்ளார். ராஜபாளையத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை மோசடியாக தனது பெயரில் பதிவு செய்து விட்டார் என உச்சம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் புகார் அளித்தார்.
திமுக பிரமுகர் கே. என். நேருவும், அன்பில் பெரியசாமியும் திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக தனது நிலத்தை பறித்துக் கொண்டதாக துறையூரைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன் என்பவர் புகார் கொடுத்தித்ததின் விளைவாக வழக்கு பாய்ந்தது. இவ்வழக்கில் லால்குடி தொகுதி திமுக சௌந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக கே.என்.நேருவின் தம்பி இராமஜெயம் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
விழுப்புரத்தில் அரசு ஊழியர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான பூங்கா உள்ளிட்ட இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்று அந்த சங்கத்தின் அப்போதைய தலைவர் நாராயணசாமி அளித்த புகாரின் காரணமாக பொன்முடி கைது செய்யப்பட்டார்.
சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில், கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் பெயரில் 2,100 சதுர அடியில் உள்ள இடத்தை தங்களுக்கு வேண்டும் என்று திமுக பிரமுகர் வீரபாண்டி ஆறுமுகம் அவரது மகன் ராஜேந்திரன், அவரது உதவியாளர் சேகர் மற்றம் சிலர் (மொத்தம் 16 பேர்) மிரட்டியதாக கோயம்பத்தூர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வரும் பிரேம்நாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தென்காசி கருப்பசாமி பாண்டியன், நடுவக்குறிச்சியை சேர்ந்த குப்பையா பாண்டியன் தனது 3 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
திமுக பிரமுகர் ப.ரங்கநாதனும் அவரது கூட்டாளி கௌரிசங்கரும் இணைந்து போலி ஆவணம் தயாரித்து சென்னை முகப்பேரை அடுத்த நொளம்யூர் பகுதியிலுள்ள அண்ணாமலை அவென்யூ என்ற குடியிருப்பு பகுதியின் 20 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது... வேளச்சேரியில் காலி இடங்களை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெருங்குடி திமுக பிரமுகர் எஸ்.வி. ரவிச்சந்திரன் குண்டர்கள் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நில அபகரிப்பு வழக்கில் திமுகவினர் பட்டியல் நீண்டது... இந்த வழக்குகளால் திமுகவினரின் நில மோசடி அராஜகம் என்ற பெயர் அழியாத கறையாக மாறியது... அதுமட்டுமின்றி இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் திமுகவை பொதுமக்களிடத்தில் பலவீனமடைய செய்தது... இதனால் கடந்த 10 ஆண்டாக திமுக தனது ஆட்சியை இழந்தது...
இந்நிலையில், திமுகவினரை மட்டுமே குறிவைத்து நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்படுவதாகவும், 2006 முதல் 2011 வரையிலான சம்பவங்கள் மட்டுமே விசாரிக்கப்படுவதாகவும், 2001ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற குற்றங்கள் பற்றி விசாரிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுகவின் மீதான கறைய போக்கவேண்டும் என்பதில் முழுமூச்சாக அல்ல... உயிர்மூச்சாக பணியாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதுமட்டுமின்றி ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் பல கோடி மதிப்புள்ள பல ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டுள்ளனர்... நில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் அல்ல... நிலங்களை மீட்டு பாதுகாப்பவர்கள்தான் திமுக அரசு என்று நிரூபித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
அதுமட்டுமின்றி கழகத்தை சேர்ந்தவர்களுக்கும் பல்வேறு கட்டுபாடுகளையும் விதித்து சிறப்பாக கழகத்தை வழிநடத்தி வருகிறார்... அரசு அதிகாரிகளுக்கும் சுதந்திர போக்கை வழங்கி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் என்றால் மிகையாகாது... பொதுமக்கள் போற்றும் சிறந்த முதல்வராக பணியாற்றி வருகிறார் என்பது நிதர்சனம்...
இந்நிலையில் அவரது ஆட்சிக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுகவினர்கள் சிலர் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளனர்... பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் சார்பதிவாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபடுவதாக தொடர்ந்து சில நாட்களாக குற்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது..
நில ஆக்கமிரப்பு, தவறான பத்திரப்பதிவு போன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்... அதுமட்டுமின்றி அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள், பதிவுத்துறை ஐஜி நன்றாக தெரியும் என்றெல்லாம் மிரட்டும் போக்கு கையாளப்படுகின்றன... அமைச்சர்கள் பெயரை தவறாக பயன்படுத்துபடுகின்றனர்...
இதற்கு ஒத்துப்போகாத சார்பதிவாளர்களை மிரட்டுவதும், பொய் புகார்களை பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்புவது போன்ற செயல்கள் அரங்கேறி வருகின்றன... அண்மையில் வாணியம்பாடி சார்பதிவாளர் மாற்றத்திலும் இதுபோன்ற செயலே அரங்கேறி உள்ளதாம்...
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையீடு ஆரம்பித்துள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்... இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்... இல்லையென்றால் சிறப்பாக மக்களாட்சி நடத்தும் முதல்வரின் பெயருக்கும் ஆட்சிக்கும் களங்கம் ஏற்படும்... என்று ஆதங்கப்படுகின்றனர்... உண்மை தொண்டர்கள்....
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவினரும் நில ஆக்கிரமிப்புகள் அதிகம் செய்துள்ளனர்... என்றும், ஊழல் ஆட்சிதான் நடைபெற்றது என்றும் திமுகவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.. நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா... என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்... காலச்சக்கரம் சுழற்சியில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் சந்தேசகம் இல்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...


No comments
Thank you for your comments