மோடி அரசை கண்டித்து ஈரோடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்...
ஈரோடு. நவ. 28-
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 28-11-2021 அன்று மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அணைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை கண்டித்தும் மாநகர காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஈ.பி.ரவி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா., அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஈரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருகிலிருந்து காவேரி ரோடு வழியாக வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் வரை மத்திய அரசைக் கண்டித்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்ட கண்டன கோசங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் மத்திய அரசைக் கண்டித்து கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ வே ரா அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களும், மாநில, மாவட்ட, மாநகர பல்வேறு பிரிவைச்சார்ந்த பொறுப்பாளர்களும் உரையாற்றினார்கள் .
No comments
Thank you for your comments