விற்பனை சரிவால் முட்டை விலை குறைப்பு!
நாமக்கல் :
முட்டை விற்பனை சரிவால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ. 4.55-ஆக கடந்த வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மழை மற்றும் புயல்களால் முட்டை அனுப்புவதில் தடை ஏற்பட்டிருப்பதாலும், பெரும்பாலான மாவட்டங்களில் முட்டை விற்பனை சரிந்துள்ளதால் விலையில் மாற்றம் செய்யலாம் என முட்டை விலை நிர்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது..
இதனையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.55-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 82-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
முட்டை விற்பனை சரிவால் கோழிப்பண்ணையாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கேரளாவில் மழைவெள்ள பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் குளிரைத் தாங்காமல் ஆங்காங்கே கோழிகள் இறப்பதாக கூறப்பட்டாலும், அடுத்து பறவைக்காய்ச்சல் பீதி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
No comments
Thank you for your comments