Breaking News

ஆசிரியர்களுடன் விடுமுறை நாட்கள் நிகழ்வுகளை சுவரஸ்யமாக பகிர்ந்துகொண்ட மாணவர்கள்

 காஞ்சிபுரம் 

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு  உற்சாக வரவேற்பு அளித்து அவர்களை வரவேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. 

இந்நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவல் தொற்று குறைந்து வருவதை அடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனை அடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவர்களை வரவேற்றனர்.

பள்ளி மாணவ மாணவிகள் தங்களது சக வகுப்பு மாணவ மாணவிகளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களுடன் கடந்த 10 மாத காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments