10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு ரத்து : பாமகவினர் சாலை மறியல்
காஞ்சிபுரம்:
தமிழக அரசு பிற்பட்ட சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்த 29 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னிய சமூகத்திற்கென 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
உயர்நீதி மன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னிய சங்கத்தை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொன்னேரி கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.










No comments
Thank you for your comments