Breaking News

விவசாய பெருமக்களுக்கு குறைவான வாடகையில் வேளான் இயந்திரங்கள்...

 ஈரோடு,  நவ. 28-

தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  தற்போதுள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையினை சமாளித்து வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக, வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில்  விவசாய பணிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களை அரசின் சார்பில் குறைந்த வாடகைக்கு தரும் திட்டத்தினை  மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்ணி தொடங்கி வைத்தார். இதில் மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ. 970-க்கும், டிராக்டர் மணிக்கு ரூ.400/- க்கும், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.760/-க்கும், நெல் அறுவடை இயந்திரம் (Track Type) மணிக்கு ரூ.1630/ -க்கும் வாடகைக்கு வழங்கப்படுகிறது.

டிராக்டரால் இயங்கக்கூடிய கீழ்க்கண்ட நவீன வேளாண் கருவிகள் டிராக்டருடன் மணிக்கு ரூ.400/- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

மேலும்  தென்னை மட்டைகள் தூளாக்கும் கருவி, நாற்றுநடவு செய்யும் கருவி,  குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் கருவி,  சோளத்தட்டு அறுக்கும் கருவி, வைக்கோல் உலர்த்தும் கருவி,  வைக்கோலை உருளை கட்டுகளாக்கும் கருவி,  பிரேக் உடன் கூடிய ஹைட்ராலிக் டிப்பர் டிரெய்லர், திருப்பும் வசதி கொண்ட வார்ப்பு இறகு கலப்பை,  நிலக்கடலை தோண்டும் கருவி, விதை விதைக்கும் கருவி, கரும்பு தோகை உரிக்கும் கருவி, வாழைத்தண்டு துகளாக்கும் கருவி, வரப்பு செதுக்கி சேறு பூசும் கருவி, உளி கலப்பை, சேற்று உழவு கருவி என மேலே குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும். விவசாயிகள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தினை அணுகி பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.       

தேவைபடுபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 

செயற்பொறியாளர்  (வே.பொ) அலுவலகம், 

63/74, ஔவையார் விதி, 

ஆசிரியர் காலனி,

 ஈரோடு மாவட்டம் - 638 011.

தொலைபேசி எண் : 0424-2270067

 

உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம்,

கருங்கவுண்டன் பாளையம், 

சர்வே எண். 1012/12 

வடமுகம் வெள்ளோடு கிராமம், 

வள்ளிபுரத்தாம்பாளையம் (அஞ்சல்)

 ஈரோடு மாவட்டம் - 638 112.


உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், 

33/12ஏ, தெற்கு பார்க் வீதி, 

கோபிசெட்டிபாளையம், 

ஈரோடு மாவட்டம்.

தொலைபேசி எண்: 0424-2904843

No comments

Thank you for your comments