Breaking News

ஜெய் பீம் திரைப்படக் குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, நவ.2-

நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் தமிழ்த் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா குழுவினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.

பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!

நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் சூர்யா அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

யிணீவீ ஙிலீவீனீ போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்!

No comments

Thank you for your comments