Breaking News

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 823 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 823 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்திற்கு நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

காஞ்சிபுரம் (381) மற்றும் செங்கல்பட்டு(528) மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. 

அதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 823 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

84 ஏரிகள் 70%-100%,  

1 ஏரி 50% - 75% , 

1 ஏரி 25% - 50%  

நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments