700 விவசாயிகள் போராட்டத்தில் உயிர் தியாகம் போற்றி மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதியான காந்திரோடு பெரியார் தூண் அருகில் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் வழிகாட்டுதலின் படி மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்துதினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதியான காந்திரோடு பெரியார் தூண் அருகில் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் வழிகாட்டுதலின் படி மாவட்ட தலைவரும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அளவூர் V. நாகராஜன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்துதினர்.
ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண்மை சட்டங்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது. நமது விவசாயிகளின் போராட்டத்திற்கும், அவர்களின் தியாகத்திற்கும், இந்த சட்டங்களை எதிர்த்து போராடிய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இதை போற்றும் வகையில், பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டன.
இந்நிலையில், 700 விவசாயிகள் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ததையும் போற்றி அவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின்போது நகர தலைவர் நாதன் என்கின்ற சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், மாவட்ட ஒன்றிய குழு கவுன்சிலர் அனிதா மகேந்திரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments