கொலை வழக்கில் 4 பேர் கைது...
கோவை:
கோவை மாவட்டம் மதுக்கரை போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மதுக்கரை போலீஸார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்கிற ரகுபதி (வயது 20), உதயகுமார் (28), சஞ்சீவ்குமார் (21), சந்தோஷ்குமார் (26) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் கைதான 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் இருக்கும் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதற்கான உத்தரவு நகல் சிறைத்துறையினர் பென் மூலம் சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments