Breaking News

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு - ரூ.35,208 கோடிக்கு 59 புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை :

கோவை கொடிசியா வளாகத்தில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு  இன்று (23.11.2021) கோயம்புத்தூரில் சிறப்புற நடைபெற்றது.  

ரூ.35,208 கோடிக்கு 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் 82 திட்டங்களின் மூலம் 52,549 கோடி ரூபாய் முதலீட்டில் 92,420  நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது..  

தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன.

அந்தவகையில், தமிழகத்திலும் முதலீட்டாளர்கள் மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

திமுக ஆட்சி அமைந்ததும், முதல் மாதத்திலேயே ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் ஒரு நடவடிக்கையாக சென்னை கிண்டியில் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. 

தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த இரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டுமே நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் உள்ள கோவை போன்ற தொழில் நகரங்களிலும் நடத்தினால் மற்ற பகுதிகளும் தொழில் விரிவாக்கம் பெறும் என தொழில்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய திமுக அரசின் 3-வது “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு”  என்ற முதலீட்டாளர்கள் மாநாடு கோவை கொடிசியாவில் இன்று நடந்தது.

முதலீட்டாளர்கள் முகவரி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கோவை, திருப்பூரில் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.

நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து இரவு கோவை விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

“முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” 

இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு”  என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

 இம்மாநாட்டில்,  கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன:-

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்  நிகழ்ச்சியில்,  34,723 கோடி ரூபாய் முதலீட்டில் 74,835 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. 

52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் பின்வருமாறு:-  

வ.எண் /  நிறுவனத்தின் பெயர்  / இடம் / உற்பத்திப் பொருள்

1.Dalmia Bharat Green Vision Limited / கோயம்புத்தூர், செங்கல்பட்டு & விருதுநகர் மாவட்டம் / சிமெண்ட் அரைத்தல்

2.Adani Enterprises (Phase- 2) / சென்னை / தகவல் தரவு மையம்

3.Welspun One Logistics Parks /காஞ்சிபுரம் & திருவள்ளூர் / தொழிற் பூங்கா

4.Larsen & Toubro /காஞ்சிபுரம் / தகவல் தரவு மையம்

5.STT Global Data Centres (Phase- 2) /சென்னை/ தகவல் தரவு மையம்

6.Tapaz Info Parks (EverYondr) /சென்னை/ தகவல் தரவு மையம்

7.Ctrl S Data Centers /சென்னை /தகவல் தரவு மையம்

8.Shell India Markets /தமிழ்நாடு முழுவதும் சில்லறை விற்பனை மையங்கள்

9.TVS Motor /கிருஷ்ணகிரி மின் வாகனங்கள் தயாரிப்பு

10.Ultratech Cement Limited /கரூர், தூத்துக்குடி & ராணிப்பேட்டை /சிமெண்ட் உற்பத்தி

11.Ansell Sterile Solutions  Pvt Ltd (Exp) /பெருந்துறை /மருத்துவக் கையுறைகள்

12.SimpleEnergy Pvt Ltd /தர்மபுரி & கிருஷ்ணகிரி / மின் வாகனங்கள்

13.Booma Innovative transport solution Pvt Ltd/ கோயம்புத்தூர் /மின்சார ஸ்கூட்டர்கள்

14.KIMS Health care Management Ltd/ கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி / பல்நோக்கு மருத்துவமனை

15.Sameera Warehousing Pvt Ltd /மதுரை, ஓசூர் & காஞ்சிபுரம்/ தொழிற் பூங்கா

16.Nxtra  by Airtel   (Phase- 2) /சென்னை / தகவல் தரவு மையம்

17.Jay Jay Mills/ சிப்காட் பெருந்துறை மற்றும் திருப்பூர் / குழந்தைகளுக்கான துணிகள்

18.Milky Mist /ஈரோடு /பால் பொருட்கள்

19.Ramachandran Group of Companies / தென் மாவட்டங்கள் / ஜவுளி, உணவுத் துறையில் திறன் மேம்பாடு

20.Hindustan Unilever Limited /சென்னை /உணவுப் பொருட்கள்

21.Pallaava Group / நாமக்கல் / நூற்பு ஆலைகள்

22.GHCL திருச்சி & மதுரை / நூற்பு ஆலைகள்

23.Raptee Energy Pvt Ltd /இன்னும் முடிவு செய்யப்படவில்லை/ இரு சக்கர வாகன உற்பத்தி

24.Eveready Spinning Mills/ திண்டுக்கல் மற்றும் திருப்பூர்/ நூற்பு ஆலைகள்

25.Bonfiglioli Transmissions Private Limited/ காஞ்சிபுரம் / மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

26.Gainup Industries /திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி / தொழில் நுட்ப ஜவுளி

27.Myunghwa Automotive India Pvt Ltd /காஞ்சிபுரம் / மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

28.Schaeffler India Limited /கிருஷ்ணகிரி /மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் விவசாய  பொருட்கள்

29.NDR Infrastructure Pvt Ltd திருவள்ளூர் /சிமெண்ட் கிடங்குகள்

30.Binny new Re Energy  Ltd திருநெல்வேலி & தூத்துக்குடி / எத்தனால் உற்பத்தி

31.Magenta EV Solutions Pvt Ltd /கிருஷ்ணகிரி /மின் ஏற்றுக் கலன்கள்

32.CIE Hosur Ltd / கிருஷ்ணகிரி /துல்லிய மோட்டார் வாகன உதிரிபாகங்கள்

33.Zeon International/ தமிழகம் முழுவதும் / மின்னேற்று நிலையங்கள்

34.SRF Ltd/ திருவள்ளூர் & புதுக்கோட்டை/ டயர் உதிரி பாகங்கள்

35.Indigo Paints  Ltd/ ஈரோடு /பெயிண்ட் உற்பத்தி - விரிவாக்கம்

36.ICMC Property Management  (MSC) /அம்பத்தூர் / தகவல் தொழில் நுட்பம்

37.Nanda devi bio energy LLP /கங்கைகொண்டான் சிப்காட், திருநெல்வேலி / தானிய அடிப்படையிலான எத்தனால்

38.Raana biofuels pvt ltd/ திருச்சி / தானிய அடிப்படையிலான எத்தனால்

39.Senvion India Pvt. Ltd/ புதுக்கோட்டை / காற்றாலை Blades

40.Makino India Pvt Ltd /கோயம்புத்தூர் /CNC இயந்திர பாகங்கள்

41.Mitsuya farms pvt ltd / கிருஷ்ணகிரி /உணவுப் பொருட்கள்

42.SKAPS Industries India Pvt Ltd/ காஞ்சிபுரம் / தொழில் நுட்ப ஜவுளி

43.RICO Auto industries Ltd /காஞ்சிபுரம் /உயர் தொழில் நுட்ப மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

44.Propel Industries Private Limited / திருப்பூர்/ மின் வாகன உதிரி பாகங்கள்

45.Indo Autotech Ltd/ கிருஷ்ணகிரி/ மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

46.Vinata Aeromobility Pvt Ltd /காஞ்சிபுரம்/ R&D

47.Subros Ltd /காஞ்சிபுரம்/ மோட்டார் வாகனங்களுக்கான குளிர்பதன வசதி

48.Albot / கோயம்புத்தூர் /Stemcells R&D (TIDCO EOI)

49.Motherson Auto Solutions  Ltd Phase 2 / காஞ்சிபுரம்/ தொழிற் பூங்கா

50.Warsaw International Pvt Ltd /திருப்பூர்/ ஆயத்த ஆடைகள்

51.Daicel Corporation/ செங்கல்பட்டு /மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

52.PCBL (TN) Limited/ திருவள்ளூர் /கார்பன் ப்ளாக்

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

மேலும், 485 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,960 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 7 வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.  

485 கோடி ரூபாய் முதலீட்டில் 7 ஒப்பந்தங்கள் பரிமாற்றம்  விவரங்கள் பின்வருமாறு:-

வ.எண்/ நிறுவனத்தின் பெயர்/ இடம்/ உற்பத்திப் பொருள்

1.Vee j pee aluminium foundry private limited /கோயம்புத்தூர் /வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள்

2.Indo-Mim Pvt Ltd/ காஞ்சிபுரம் / வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள்

3.Indocool composites private limited /வல்லம் வடகால், காஞ்சிபுரம்/ வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள்

4.Air Works India Engineering Pvt Ltd / ஓசூர் /MRO Facility

5.Orient Flights Pvt Ltd/ இன்னும் உறுதி செய்யப்படவில்லை/ விமானம் பயிற்சி அமைப்பு

6.Hercules aviation training school private limited /சேலம் /விமானம், பைலட் மற்றும் டிரோன் பயிற்சி அமைப்பு

7.Sayatva industrial private limited / திருச்சி /வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள்

ஆக மொத்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 52 நிறுவனங்கள் ரூ.34,723 கோடி மதிப்பிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உள்பட 7 நிறுவனங்கள் ரூ.485 கோடி மதிப்பிலும் என  ரூ.35,208 கோடி ரூபாய் முதலீட்டில், 76,795 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும், 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டன.  

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கையேடு

டிட்கோ நிறுவனம் தயாரித்துள்ள மாநிலத்தில் உள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஒன்றினையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் வெளியிட்டார்கள்.  ஒவ்வொரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன், தொடர்பு விவரங்கள், உற்பத்திப் பொருட்களின் விவரம், சோதனைக்கான வசதிகள், ஆராய்ச்சி நிலையங்கள், முதற்கட்ட தொழில் பாதுகாப்பு பூங்காக்கள், அரசு வழங்கும் மானியங்கள் போன்ற விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.  பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் தங்களது வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இக்கையேடு முதலாம் மற்றும் இரண்டாம் அடுக்கு நிறுவனங்களுக்கும்  OEM நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, விநியோகச்சங்கிலி பலப்படுத்திட உதவிடும்.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கான திறன்மிகு மையம்  

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த ஒரு திறன்மிகு மையத்தினை டிட்கோ நிறுவனம், திருவாளர் டசோ சிஸ்டம்ஸ்  (M/s Dassault Systemes)  நிறுவனத்துடன் இணைந்து நிறுவ உள்ளது.  212 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள, இத்திறன்மிகு மையம், பொருள் வடிவமைப்பு, உற்பத்தி மேம்பாடு, புரோட்டோ டைப்பிங், திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்ற செயல் திறன்களை வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிலகங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வழங்கும்.  மேலும், இதன் மூலமாக, தமிழகத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுடன், ஏற்கெனவே இயங்கி வரும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் பரிமாற்றப்பட்டது.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்

இந்நிகழ்ச்சியின்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 13,413 கோடி ரூபாய் முதலீட்டில் 11,681 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 13  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

வ.எண் / நிறுவனத்தின் பெயர் / இடம் / உற்பத்திப் பொருள்

1.First Solar /காஞ்சிபுரம் /சூரிய ஒளி உற்பத்தி

2 .Yotta /காஞ்சிபுரம் /தகவல் தரவு மையம்

3 .ZF Wabco /சிப்காட் ஒரகடம், காஞ்சிபுரம்/ மோட்டார் வாகன உதிரிபாகங்கள்

4 .Techno Electric/ செங்கல்பட்டு/ தகவல் தரவ மையம்

5 .Britannia Industries Ltd /திருநெல்வேலி/ உணவுப் பொருட்கள்

6 .Qmax Test Equipments / காஞ்சிபுரம்/ லித்தியம் அயன் மின்னேற்றுகள்

7 .Subam Paper And Boards Private Limited/ திருநெல்வேலி/ பேப்பர் பொருட்கள்

8 .Flender Drives Pvt Ltd /காஞ்சிபுரம் /காற்றாலை Blade கியர்பாக்ஸ

9 .Mothi Group of Companies - Expansion/ நாமக்கல் /நூற்பு ஆலைகள்

10.Vinveli Automated Systems Pvt Ltd /காஞ்சிபுரம்/ டிரோன்கள்

11.Shree Sarvaloka Textiles Pvt Ltd/ விருதுநகர்/ நூற்பு ஆலைகள்

12.Sthree Chemicals சிப்காட் ராணிப்பேட்டை/ API

13.Kobelco Industrial Machinery /காஞ்சிபுரம்/ டயர் இயந்திரங்கள் உற்பத்தி

திட்டங்களைத் துவக்கி வைத்தல்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மொத்தம் 3,928 கோடி ரூபாய் முதலீட்டில் 3,944 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 10 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் துவக்கி வைத்தார்கள். 

வ.எண் / நிறுவனத்தின் பெயர் / இடம் / உற்பத்திப் பொருள்

1.RMZ One paramount /சென்னை /தகவல் நுட்ப தொழில் பூங்கா

2 .Nxtra By Airtel   Phase- 1 /செங்கல்பட்டு /தகவல் தரவு மையம்

3 .STT Global Data Centres (Phase- 1) /சென்னை/ தகவல் தரவு மையம்

4 .Ampere vehicles /இராணிப்பேட்டை/ மின் வாகன 2 சக்கர வண்டிகள்

5 .Feather Lite “The Address” /சென்னை /தகவல் நுட்ப தொழில் பூங்கா

6 .Aarush manufacturing solutions private limited/ இராணிப்பேட்டை/ Sheet Metal Pressing

7.Visaka Industries /திருப்பூர் /ஃபைபர் சிமெண்ட் பலகை

8.Roots Group of Companies/ கோயம்புத்தூர் /மோட்டார் வாகன உதிரி பாகங்கள்

9.Chennai SSSS Equipments/ செங்கல்பட்டு/ Earth breaking உபகரணங்கள்

10.Motherson Auto Solutions  Phase 1 /காஞ்சிபுரம்/ தொழிற் பூங்கா

மேற்கூறிய 82 திட்டங்களின் மூலம் 52,549 கோடி ரூபாய் முதலீட்டில் 92,420  நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிட வகை செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம்,  திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய 22 மாவட்டங்களில் முதலீடுகள் பரவலாக மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021 வெளியீடு

2021-22 ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்          நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு ஏதுவாகவும், மேம்பட்ட நிதிநுட்ப (Fintech) நிறுவனங்களின் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்திடும் வகையிலும் "தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021'' யை வெளியிட்டார்கள். 

மேலும், சென்னையில் நிதி நுட்ப நகரம் (Fin Tech City). இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில், நியோ டைடல்  தொழில் நுட்பப் பூங்காக்கள் (Neo - TIDEL Parks) அமைத்தல் போன்ற பல சிறப்பம்சங்கள் இக்கொள்கையில் இடம் பெற்று உள்ளன.

ஒற்றைச்சாளர இணையம் 2.0 ன் கைபேசி செயலி

 முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணைய தளம் 2.0 வின் கைபேசி செயலியைத் துவக்கி வைத்தார்கள். 

தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், இக்கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

விண்ணப்பங்கள் மேற்கொள்ளுதல், அனுமதிகள் பற்றிய தகவல்கள், அனுமதிகளின் நிலைதனைக் கண்காணித்தல், தெளிவுகள் / சந்தேகங்கள் எழுப்புதல் போன்ற சிறப்பம்சங்கள் இந்தச் செயலியில் இடம் பெற்றுள்ளன.

ஒரு   காலப் பேழை புத்தகம் (Coffee Table Book) வெளியீடு

கொடிசியா அமைப்பின் பொன்விழா நிறைவை ஒட்டி ஒரு   காலப் பேழை புத்தகம் (Coffee Table Book) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு ஊரகத் தொழிற் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன்,  மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்,  மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  திரு.வி.செந்தில் பாலாஜி,  மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர். காந்தி,  மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ. ராசா, திரு.பி.ஆர். நடராஜன்,                          திரு. கு. சண்முகசுந்தரம், மாநிலங்களவை  உறுப்பினர்  திரு. அந்தியூர் செல்வராஜ், மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர்கள்,  தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,     திரு. எஸ்.கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குநர்  திரு. பங்கஜ் குமார் பன்சல், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., கோவை மாவட்ட ஆட்சியர்    டாக்டர் .ஜி.எஸ் .  சமீரன், இ.ஆ.ப., அரசு உயர் அதிகாரிகள் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர், திரு. வேணு சீனிவாசன், பண்ணாரியம்மன் குழுமத்தின் தலைவர் திரு.எஸ்.வி.பாலசுப்ரமணியம், ஜிஆர்ஜி நிறுவனங்களின் (PSG Group)-ன் தலைவர் மற்றும் நிறுவன அறங்காவலர் திருமதி நந்தினி ரங்கசாமி, டெய்சல் (Daicel) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், திரு. யோஷி~பூமி டகாசே (Yoshifumi Takase) மற்றும் கொடிசியாவின் தலைவர்    திரு. ரமேஷ் பாபு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு இங்குள்ள தொழில்துறையின் அடுத்த கட்ட விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு பெரிதும் உதவியாக அமையும் என கோவையை சேர்ந்த தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.




No comments

Thank you for your comments