ஓமிக்ரான் வைரசை கண்டறிய தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்கள் துவக்கம்
சென்னை, நவ.30-
ஒமிக்ரான் வைரசை கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் துவக்கம்
நவம்பர் 24ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரானா வைரஸ் ஒமிக்ரானை கண்டறியக்கூடிய வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் துவக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் தொற்றைக் கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று இருப்பது தெரிந்தால் மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments