நவ.11ம் தேதி கனமழை ... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதுடெல்லி:
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 11-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது.
சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழைபதிவாகி உள்ளது. எம்ஆர்சி நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ந்தது.
சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.
இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, புயல் சுழற்சி காரணமாக சென்னையில் இன்று கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 9-11 வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments