சேரும் சகதியுமாக அக்ஸிலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளி சாலை... மாணவிகள் பெரும் அவதி
வேலூர்:
அக்ஸிலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலை சேரும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிபடுகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அக்ஸிலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரி சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய இடங்களை சரிவர சமன் செய்யாமல் மேடு பள்ளமாக உள்ளது.
தற்போது பெய்துவரும் மழையால் அந்த சாலை முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளது.
இதனால் அக்ஸிலியம் பள்ளி மாணவிகள் நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
அப்பகுதிவாசிகளும் சிறுவர் முதல் பெரியவர் வரை அந்த வழியாக சென்று வருகின்றனர்.
அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர்.
பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சாலையால் மாணவர்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகளுக்கு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதை கருத்தில் கொண்டு இதை உடனே சரி செய்ய வேண்டும் என பொது மக்களும் சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments