ஒட்டு கேட்பு விவகாரம் : இன்று பெகசுஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி, அக்.27-
இஸ்ரேல் நிறுவனத்தின் பேகசுஸ் என்ற மொபைல் மின்சாதன பொருளை பயன்படுத்தி இந்திய குடிமக்களை உளவு பார்க்க இந்திய அரசு அனுமதித்தது என்ற புகார் குறித்து விசாரணை நடத்த சுயேச்சையான குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக புதன்கிழமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
ஐந்துக்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன இந்திய குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேல் நிறுவனத்தின் சாதனத்தின் மூலம் இந்திய குடிமக்கள் உளவு பார்க்கப்பட்டு இருப்பதாக பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு தனது ஆய்வுக்கு பிறகு செய்தி வெளியிட்டது.
🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள் நிலை என்ன? 👆🔔👍
இதுகுறித்து சுயேச்சையான குழு ஒன்றின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. உள்துறையோ, அமைச்சரவை செயலாளரோ நீதிமன்றத்தின் நோட்டீசுக்கு இணங்க பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யவில்லை. அதற்குப்பதிலாக தகவல் தொடர்பு துறை செயலாளர் மிக சிறிய வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தார்.
விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு அரசுக்கு தெரிவித்தது. ஆனால் விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்வது அரசின் பாதுகாப்புக்கு எதிரானது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிபுணர் குழு ஒன்றை நியமிப்பதாக அந்த குழு முன் அனைத்து விவரங்களும் தாக்கல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அரசு வழக்கறிஞர் முன்வைத்த இந்தத் திட்டத்தை மனுதாரர்கள் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து சுயேச்சையான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட முன்வந்தது.
விசாரனைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் சிலர் கிடைக்காத காரணத்தினால் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது அதன்பிறகு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட உள்ளது.



No comments
Thank you for your comments