Breaking News

இன்று பட்டா மாற்ற சிறப்பு முகாம்

ஈரோடு, அக்.27-

ஈரோடு மாவட்டத்திலுள்ள பத்து வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரால் 31.08.2021 அன்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு, அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில், துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு முகாம் நடத்திட மண்டல துணை வட்டாட்சியர், கிராம நிருவாக அலுவலர், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தமிழ் நிலம் மென் பொருளில் பதிவேற்றம் செய்து, கணினியில் எளிய திருத்தங்கள் மேற்கொண்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்துகிராமமக்களும் பயன் பெற பட்டா மாற்ற சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி சிறப்பு முகாம்களை வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடத்தி மனுக்கள் மீதுதீர்வு செய்திட பின்வரும் வட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்தில் உள்ள கிராமங்களில் 27.10.2021 முதல் 12.01.2022 வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

வருவாய் வட்டாட்சியர்கள் தங்கள் வட்டங்களில் மேற்படி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள வருவாய் கிராமங்கள், முகாம் நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி   தெரிவித்துள்ளார்.  


🔥அதிகாரப்பூர்வ இணையதளம் 👉  http://www.tnscda.com/

No comments

Thank you for your comments