ஒட்டுகேட்பு விவகாரம்: பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி, அக்.27-
தேச பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் விமர்சனத்துடன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலரது செல்போன் உரையாடல்களை பெகாசஸ் என்னும் செயலி மூலம் மத்திய அரசு ஒட்டுக்கேட்டது என்ற சர்ச்சை சில மாதங்களுக்கு முன்பு பூதாகரமாக வெடித்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின.
இதனை தொடர்ந்து, இஸ்ரேல் நிறுவனத்தின் பேகசுஸ் என்ற மொபைல் மின்சாதன பொருளை பயன்படுத்தி இந்திய குடிமக்களை உளவு பார்க்க இந்திய அரசு அனுமதித்தது என்ற புகார் குறித்து விசாரணை நடத்த சுயேச்சையான குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஐந்துக்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்திய குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையில் இஸ்ரேல் நிறுவனத்தின் சாதனத்தின் மூலம் இந்திய குடிமக்கள் உளவு பார்க்கப்பட்டு இருப்பதாக பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு தனது ஆய்வுக்கு பிறகு செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து சுயேச்சையான குழு ஒன்றின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. உள்துறையோ, அமைச்சரவை செயலாளரோ நீதிமன்றத்தின் நோட்டீசுக்கு இணங்க பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யவில்லை. அதற்குப்பதிலாக தகவல் தொடர்பு துறை செயலாளர் மிக சிறிய வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தார்.
விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு அரசுக்கு தெரிவித்தது. ஆனால் விரிவான வாக்குமூலம் தாக்கல் செய்வது அரசின் பாதுகாப்புக்கு எதிரானது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிபுணர் குழு ஒன்றை நியமிப்பதாக அந்த குழு முன் அனைத்து விவரங்களும் தாக்கல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அரசு வழக்கறிஞர் முன்வைத்த இந்தத் திட்டத்தை மனுதாரர்கள் ஏற்கவில்லை.
🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள் நிலை என்ன? 👆🔔👍
பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பத்திரிகையாளர் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 13ம் தேதி முடிவடைந்தது.
விசாரனைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் சிலர் கிடைக்காத காரணத்தினால் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு இன்று (27.10.2021) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மேலும், இந்த குழு 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த குழு உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் இயங்கும் எனவும் தீர்ப்பளித்தது.
மத்திய அரசுக்கு போதுமான காலஅவகாசம் கொடுக்கப்பட்டும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. தேச பாதுகாப்பு என்ற வளையத்தில் மத்திய அரசு தப்பிக்க முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளது.
No comments
Thank you for your comments