கராத்தே போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா
காஞ்சிபுரம், அக். 21 -
கராத்தே போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற 'இஷின்றியூ' கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டி கவுரவித்தார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., விளையாட்டு திடலில் நடந்த இந்த கரேத்தா போட்டிகளில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 'இஷின்றியூ' மாணவ- மாணவிகள் என, மொத்தம் 38 பேர் பங்கேற்றனர்.
இதில், 16 வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். 6 வீரர்கள் சில்வர் பதக்கமும், 4 வீரர்கள் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இந்த 36 வீரர்களும் உலகளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மேற்கண்ட வீரர்களுக்குத் தான் காஞ்சிபுரத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை 'இஷின்றியூ' பொதுச் செயலாளர் நூர்முகமது செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க.ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், நகர அவைத்தலைவர் சந்துரு , நகர இளைஞர் அணி அமைப்பாளர் கமலக்கண்ணன்,வட்ட செயலாளர் சங்கர், எம்.எஸ்.பாலன், எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார்,உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments