Breaking News

கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு குடை பரிசு...

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் துவங்கியது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இன்று 550 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராம ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட சிறப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மாகலட்சுமி ராஜசேகர் ஆகியோர் துவக்கி வைத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குடையினை பரிசாக வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத 98,447 நபர்களுக்கு இத்தடுப்பூசி முகாகம் நல் வாய்ப்பாக அமையும் என்பதும் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 73 ஆயிரத்து 264 நபர்களும்,இரண்டாம் தவணையைப் 2 லட்சத்து 38 ஆயிரத்து 237 நபர்களும் செலுத்தி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ்.திவ்யா , முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரகாசம், வார்டு உறுப்பினர்கள் மாகதேவி மற்றும் ரமேஷ்,சோயிப்,அரி, பிரதாப், மதியழகன், பிரபுஹென்றிதாஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments