Breaking News

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு பதிலாக கணவர் - சகோதரர்கள் யாரும் செயல்பட கூடாது - காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி எச்சரிக்கை !

காஞ்சிபுரம், அக். 26 - 

உள்ளாட்சிகளில் பெண் பிரிதிநிதிகளுக்கு பதிலாக நிர்வாகத்தில் கணவரோ, சாகோதரர்கள், உறவினர்கள் யாரும் தலையிடக் கூடாது என்று திட்டவட்டமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி உள்ளாட்சி தேர்தல்களில் அதிகளவில் பெண்கள் வெற்றிப் பெற்று பொறுப்பேற்று உள்ளனர். 

வெற்றிப் பெற்றுள்ள இந்த பெண் பிரதிநிதிகள் தான் அவரவருக்கான ஒதுக்கப்பட்ட நிர்வாகத்தை நிர்வகிக்க வேண்டும். இதற்கு மாறாக பெண் பிரதிநிதிகளின் கணவரோ, சகோதரர்களோ, உறவினர்களோ என யாரும் தலையிடக் கூடாது. ஊராட்சி மன்றக் கூட்டங்களிலும் இது சம்பந்தமான அலுவலகங்களிலும் மேற்கண்டவர்கள் பங்கேற்கவோ, தலையீடு செய்யக்கூடாது.

இந்த அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவது தெரிய வந்தால், சம்பந்தப் பட்ட ஊராட்சி மன்றங்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும்'. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments