Breaking News

லக்கிம்பூர் கேரி வன்முறைச் சம்பவங்கள்: குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் கோரிக்கை மனு

புதுடெல்லி, அக்.13-

கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள டிக் குனியா கிராமத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்றார். மத்திய உள்துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து அஜய்குமார் பதவி விலக வேண்டும், பதவியிலுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் குழு ஒன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் இன்று கோரிக்கை மனு ஒன்றை தந்தது.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி, முன்னாள் ராணுவ அமைச்சர் அந்தோணி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் மனு ஒன்றை வழங்கினார்.

அந்த மனுவில் உள்ள விவரங்களை அவர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்தார்கள.

கடந்த செப்டம்பர் 27ம் தேதி விவசாயிகள் பார்த்து அறிவித்திருந்தார்கள் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா விவசாயிகளை மிரட்டும் வகையில் பேசியிருக்கிறார். அவர்களுக்கு சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது சமூக இணையதளங்களில் வைரலாக வெளியாகியுள்ளது. வீடியோவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா விவசாயிகளை மிரட்டும் வகையில் பேசியதை தெளிவுபடுத்துகிறது.

பின்னர் அக்டோபர் மாதம்  3ஆம் தேதி டிக்குனியா கிராமத்தில் 4 விவசாயிகள் ஒரு பத்திரிக்கையாளர் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார்கள்.

இந்த வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சராக அஜய் நிச்சயதார்த்தம் தான் விசாரணை எப்படி பாரபட்சமற்ற வகையில் நடைபெறும்?

எனவே அஜய் மிஸ்ரா மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யாவிட்டால் அவரைப் பதவியிலிருந்து விலக வேண்டும்.

கொலை வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் குழு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் வலியுறுத்தியது.

மனுவில் கண்டுள்ள கோரிக்கைகள் குறித்து உடனடியாக அரசாங்கத்திடம் இன்று பேசுவதாக ராம்நாத் கோவிந்த் காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதியளித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியே வந்ததும் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் சந்திப்பு பற்றிய விபரங்களை வெளியிட்டனர்.

No comments

Thank you for your comments