சர்வதேச முதியோர் தினம்.. ஆசிரியர்கள் மாணவிகள் றுதிமொழி ஏற்பு
வேலூர் :
காட்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவிகள் சர்வதேச முதியோர் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காட்பாடியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று முதியோர் தினத்தன்று ஆசிரியர்கள் மாணவிகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிறுவயதில் என்னை கவனமுடன் பராமரித்து வளர்கின்ற பெற்றோர்களையும் அளவில்லா அன்பைப் பொழியும் தாத்தா பாட்டியையும் அரவணைத்து பாசத்துடன் நடத்துவேன் எனது வீட்டிற்கு அருகிலுள்ள முதியவர்களையும் சமுதாயத்தில் நான் தினமும் சந்திக்கும் முதியவர்களையும் கேலி கிண்டல் செய்யாமல் அனைவரையும் கடும் சொற்களால் பேசாமல் அன்புடன் நடத்துவேன் எனது எதிர்காலம் எனது கல்வியினால் மட்டுமல்லாது அவர்களது ஊற்றினாலும் தான் என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.
முதியோருக்கு என்னால் ஆன உதவிகளை செய்து அவர்களுக்கு எல்லாவித இன்னல்களும் ஏற்படாத வண்ணம் அவர்களை பாதுகாப்பேன் அனுபவங்களை பொக்கிஷமாக கருதி அவர்கள் காட்டும் நல்வழியில் நடப்பேன் இதனை எனது சக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துக் கூறுவேன் எனது உளமாற உறுதி கூறுகிறேன். இவ்வாறு உறுதி மொழி ஏற்றனர்.

No comments
Thank you for your comments