Breaking News

தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது பட்டாசு விபத்தில் ஒருவர் பலி... காற்றில் பறக்கும் விதிமுறைகள்...

 ஆம்பூர், அக்.4-

ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் கிராமத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் போது பட்டாசு விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலி....  

ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக போட்டியிட்டுள்ள மஞ்சுளா பாஸ்கரன் என்பவர்காக பூட்டு சாவி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சென்று கொண்டிருந்தபோது பட்டாசு வெடித்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிலைதடுமாறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அபோத்து என்பவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். 

பின்னர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.  அங்கே சிகிச்சை பலனின்றி அபோத்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து, சமூக இடைவெளி மறந்து தேர்தல் பிரச்சாரம்  செய்கின்றனர்... அதோடு மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்றவை தினம் தினம் அரங்கேறுகின்றன... இதற்கு  தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments

Thank you for your comments