காஞ்சிபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்து ஓபிஎஸ் ஆலோசனைக்கூட்டம்...
காஞ்சிபுரம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் 9 மாவட்டத்தில் நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்த அந்த கட்சி நிர்வாகிகளை ஆதரிக்கும் வகையில் கட்சித் தலைமைப் பொறுப்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்று அதிமுக சார்பாக காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் துணை முதல்வரான பன்னீர்செல்வம் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்களும் தேர்தல் பொறுப்பாளர்களும்மான திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், பெஞ்சமின், கோகுல இந்திரா, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம்,கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ். எஸ்.ஆர்.சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மதனந்தபுரம் பழனி, தூசி மோகன், மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன்,ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜீ, அக்ரி நாகராஜ், அத்திவாக்கம் ரமேஷ், பிரகாஷ் பாபு,தங்கபஞ்சாட்சரம்,தருமன், எறையூர் முனுசாமி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர்,மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கோல்டு ரவி.




No comments
Thank you for your comments