பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிற்கு பிடி வாரண்ட்
ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.8-
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஹெச். ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஹெச்.ராவை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு விசாரைணைக்கு ஹெச். ராஜா ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.

No comments
Thank you for your comments