வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் - ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 726000 நபர்களில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் முதல் தவணை யாக 632638 நபர்களுக்கும் (87%) இரண்டாவது தவணையாக 177430 நபர்களுக்கும் (25%) ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுநாள் வரை தினசரி தடுப்பூசி முகாம்கள் மற்றும் வாரம் நடைபெறுகின்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி, அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 726000 நபர்களில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் முதல் தவணை யாக 632638 நபர்களுக்கும் (87%) இரண்டாவது தவணையாக 177430 நபர்களுக்கும் (25%) ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுநாள் வரை தினசரி தடுப்பூசி முகாம்கள் மற்றும் வாரம் நடைபெறுகின்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
❖ வாரம் தோறும் நடை பெறுகின்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை முதல் தவணை 98404 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணை 44637 பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
❖ வருகின்ற 10.10.2021 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம் 600 மை யங்களில் போடுவதற்கு ஏற்ப தடுப்பூசி செ லுத்துவோர் மற்றும் பயனாளிகளை முகாம்களுக்கு அழைத்துவர காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனை த்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
❖ இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் சுமார் 48000 பயனாளிகளுக்கு 600 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது.
❖ இந்த 48000 பயனாளிகளின் எண்ணிக்கையை அடைய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கீழ்காணும் ஏற்பாடுகள் செ ய்யப்பட்டள்ளன.
1. இன்று வெ ள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு ஊராட்சி, நகராட்சி மற்றும் பே ரூராட்சி
பகுதிகளில் தினந்தோறும் ஆட்டோ அறிவிப்பு (ஒலிப்பெருக்கி மூலம்) மற்றும் வீடு வீடாக செ ன்று விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
2. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு செ ன்று நடமாடும் மருத்துவக்குழுவின் மூலம் தடுப்பூசி வழங்க சிறப்பு நடவடிக்கைகள் மே ற்கொள்ளப்பட்டுள்ளது.
3. இரண்டாவது தவணை போட்டுக்கொள்ள வேண்டிய அனைத்து பயனாளிகளின் விவரங்கள் அந்தந்த வட்டாரம் மற்றும் நகராட்சிக்கு அனுப்பிவை க்கப்பட்டு அவர்கள் தவறாமல் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது.
4. இதுவரையில் ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செ லுத்த ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது.
5. இந்த நான்கு வாரங்களில் நடை பெ ற்ற மெ கா தடுப்பூசி முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனை த்து துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் (வருவாய் துறை , உள்ளாட்சிதுறை , சுகாதாரத் துறை , பள்ளி கல்வித்துறை , அங்கன்வாடி) மற்றும் இந்த மாவட்டத்தை சார்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் செ விலியர் பயிற்சி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
6. கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து தற்காத்துக்க கொள்ள அனை வரும் இரண்டு தவணை தடுப்பூசி செ லுத்திக்க கொள்ள வே ண்டும் என இந்திய மருத்துவக்கழகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments
Thank you for your comments