Breaking News

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பு

 காஞ்சிபுரம்

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட வார்டு எண்.1, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லலிதா காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 8வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விமல்ராஜ் ஆகியோரை ஆதரித்து திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகளுடன் இணைந்து காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் கீழம்பி மேல் ஒட்டிவாக்கம் கூத்திரம் மேடு ஆகிய பகுதிகளில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.


No comments

Thank you for your comments