வாலாஜாபாத் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17வது ஒன்றிய கவுன்சிலராக பிரேமா ரஞ்சித்குமார் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
ரஞ்சித்குமாரின் சொந்த ஊரான முத்தியால்பேட்டையில் ஊராட்சி மன்றத் தலைவராக இவரது ஆதரவாலரான அன்பழகனும் இன்று பிற்பகலில் பதவி ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து முத்தியால்பேட்டை வார்டு உறுப்பினர்களாக லாவண்யா, திருவேங்கிடம், மோகனவள்ளி, மாணிக்கவேல், பானுபிரியா, வளர்மதி, விசு, செல்வம், தேவி என, 9 பேரும் பதவி ஏற்றுக் கொண்டனர். விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.
No comments
Thank you for your comments