Breaking News

தமிழகத்தில் கன மழை நீடிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மிகக் கன மழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் மழை பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அக்டோபர் 18ம் தேதியிலிருந்து கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

19ஆம் தேதி,  தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20ஆம் தேதி, இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதன் கிழமை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

21ஆம் தேதி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

No comments

Thank you for your comments