நரிக்குறவர் காலனியில் வீடுகளில் புகுந்த மழை நீர்.. தொடரும் அவலம்...
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செங்கோட்டை இந்திரா நகர் நரிக்குறவர் காலனியில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது .
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செங்கோட்டை இந்திரா நகர் நரிக்குறவர் காலனி பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளது. இதனால் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நரிக்குறவர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
இங்கு 30 குடும்பங்கள் வசிக்கின்றன 30 குடும்பங்கள் மழைநீரால் பாதிப்புக்குள்ளாகின்றனர். வீடு முழுவதும் மற்றும் சுற்றியுள்ள பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.
மழைக்காலங்களில் பொதுவாக டெங்கு, மலேரியா காய்ச்சல் ஏற்படும். இந்நிலையில், தேங்கியிருக்கும் மழை நீரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இனிவரும் காலம் மழைகாலம் என்பதால் இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments