திருட்டுத்தனமாக மணல் அள்ளிய இரண்டு மாட்டு வண்டிகள் பறிமுதல்
விருத்தாசலம்
விருத்தாசலம் மணிமுத்தா ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய இரண்டு மாட்டு வண்டிகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இரவு நேரங்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது ஆக விருத்தாசலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் உள்ளது.
Click here 👉 வரலாற்று நினைவலைகள்... சுவாரஸ்யம்...
இதனை கட்டுப்படுத்தும் விதமாக விருத்தாசலம் போலீசார் மணிமுத்தாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இரண்டு மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர், அவர்களை மடக்கிப் பிடித்தனர். போலீசார் கண்டதும் வண்டிகளை ஆற்றுப் பகுதியில் விட்டு விட்டு மாடுகளை பிடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இரண்டு மாட்டு வண்டிகளையும் போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read : 👉 துரைமுருகன் நாவடக்கத்துடன் பேச வேண்டும்....! - நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டம்...! - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்


No comments
Thank you for your comments