Breaking News

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் ஊராட்சிமன்றதலைவர் மனு.

கடலூர்:

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் ஊராட்சிமன்றதலைவர் மனு அளித்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கோடங்குடி ஊராட்சிக்குட்பட்ட எழுமாத்தூர் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட இந்து ஆதிதிராவிடர் மக்கள் வசித்துவருகிறார்கள்.

இவர்களுக்குபோதிய இடமின்றி குறுகிய வீட்டில் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் நலன்கருதி இலவச பட்டா வழங்கிடவும்.

1996 ம் ஆண்டு அரசு 40 இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது அந்நாளிலிருந்து இதுநாள்வரை பட்டாவழங்கப்பட்டவர்களுக்கு இடம் அளவீடு செய்துதராமல் உள்ளது இதனால் அவ்விடத்தை சிலர்ஆக்கிரமித்து வருகிறார்கள் எனவும் அரசு வழங்கிய இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தரவேண்டுமென்றும்.

கிராமத்தில் உள்ள அரசு நத்தம் இடங்களை ஆக்கிரமிப்புகளை அகற்றி  பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டுமெனவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசாலம் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியரிடம் ஊராட்சிமன்றதலைவர் மகாலெட்சுமி வேலாயுதம் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் கோரிக்கையை நிறைவேற்றிதருவதாக கூறினார்.

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

இதுசம்மந்தமாக 19-6-2021 மற்றும் 5-7-2021தேதிகளில் ஜமா பந்தி மனு மற்றும் முலமைச்சர் தனிபிரிவு ,ஆட்சியர்க்கு  மனு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

No comments

Thank you for your comments