வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலம் மீண்டும் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
தேனி, அக்.26-
15 வருடங்களுக்கு முன்பு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை..
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட உழவர் சந்தையானது, கொரோனோ பரவல் குறைய தொடங்கியவுடன், மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. அதன்படி, தேனி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், கூடலூர் ஆகிய இடங்களில் உழவர் வார சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த வாரச் சந்தையில் உள்ளூர் வாசிகள் வந்து காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம். தற்போது காய்கறிகளின் விலை உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் வெளியே அங்காடிகளில் காய்கறிகளை வாங்குவதை விட, உழவர் சந்தைகளில் காய்கறிகளை விலை குறைவாக இருக்கும் என்பதால், காய்கறிகளை உழவர் சந்தையில் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் வாரச்சந்தையில் காணப்பட்டது.
இந்நிலையில், தேவாரம் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள், கழிவு நீர் செல்லும் கால்வாயை கடந்து வாரச் சந்தைக்கு வருகின்றனர். பொதுமக்கள் வாரச் சந்தைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பலமானது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பாலத்தை அடித்து சென்றது. அதன் பின்னர், இதுவரை அப்பகுதியில் பாலம் கட்டப்படவில்லை. அந்தப் பாலத்தின் வழியாகத்தான் பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சந்தை பள்ளிக்கூடம் செல்வதற்கு, அந்தப் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வழியாக இருப்பதால் அந்த பாலத்தை மீண்டும் கட்டித்தர பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments
Thank you for your comments