காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
தருமபுரி அக்.20-
தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 13-ஆம் வட்ட மாநாடு, சாலை விநாயகர் கோவில் சாலை, ஸ்ரீ பூபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு அணைத்து அரசு ஊழியர்களிக்கும் பழைய ஓய்வூதிய முறையை கடைபிடிக்கவும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரன்விடுப்பு, ஊதியகுழுக்களின் முடக்கப்பட்ட 12 மற்றும் 21 மாத நிலுவை தொகைகளை மீள வழங்குதல், சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், வன ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், விஸிஙி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவர்க்கும் காலமுறை ஊதியம் வழங்கிட, காலியாக உள்ள சுமார் 4.50இலட்சம் பணியிடங்களை உடனேயே நிரப்ப கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்விழாவில் ஆர் ஜெயவேல் வட்டத் தலைவர், குமரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், பிரிண்ட்ஸ் வட்ட துணைத் தலைவர், சுருளிநாதன் மாவட்ட தலைவர், விஜயகுமார் வட்டச் செயலாளர், கதிரவன் வட்ட பொறுப்பாளர், புகழேந்தி மாவட்ட பொறுப்பாளர், ரேகா மாவட்ட செயலாளர், ரீனா ஒன்றிய செயலாளர், முனிராஜ் மாவட்ட தலைவர், மனோகரன், எல்லப்பன், வளர்மதி மாவட்ட துணைத்தலைவர், சேகர் மாவட்ட செயலாளர், பழனியம்மாள் மாநில துணைத்தலைவர், சிவன் வட்ட துணைத் தலைவர், மற்றும் வட்ட மாவட்ட உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
No comments
Thank you for your comments