சுதந்திரா இயக்கம் சார்பில் கல்விக்கு தத்து எடுத்த மாணவர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்குதல்
சேலம்:
தமிழகம் முழுவதும் பொதுநல சேவைகள் செய்து வரும் சுதந்திரா இயக்கம் கல்விக்காக தத்தெடுத்த மாணவர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் விழா சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள சுதந்திரா இயக்கத்தின் மாநில தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சிவநேசன் முன்னிலையில் கல்விக்காக தத்தெடுத்த குழந்தைகளுக்கு மாநில தலைவர் எஸ். காமராஜ் புத்தாடைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.
சுதந்திரா இயக்கத்தின் கலை கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் சாந்தி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் துணைத்தலைவர் உதயசூரியன் வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் ஐயன்துறை தர்மபுரி சுரேஷ் நிர்வாக ஆலோசகர் ரவிச்சந்திரன் உறுப்பினர்கள் ஜாலி மணிகண்டன் மாதேஷ் குமார் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி அணன்பாவின் திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்வும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாநில பொருளாளர் மீனா மற்றும் துணைப் பிரிவு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments