Breaking News

திருமுருக கிருபானந்தவாரியார் ஆலயத்தில் 28 ஆம் ஆண்டு குருபூஜை விழா

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் அமைந்துள்ள திருமுருக கிருபானந்தவாரியார்  ஆலயத்தில் 28 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது 

இதில் சிறப்பு அழைப்பாளராக இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு குருபூஜை யாகத்தினை துவக்கி வைத்தார். வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடைபெற்றது. பின்னர் கலசங்களில் இருந்து புனிதநீர் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலையின் மீது ஊற்றப்பட்டு பின்னர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவுருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

இந்த குருபூஜை விழாவில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சகோதரர் புகழனார் சுவாமிகள் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் செங்குந்தர் மகாஜன சங்கதலைவர் கே.பி.கே.செல்வராஜ் செயலாளர் கே.பி.குமரகுருபரன் பொருளாளர் ஆர்.காந்தி வேலூர் மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர்  மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்து

No comments

Thank you for your comments