அரசமைப்பு உரிமை கல்வி மாணவர் மன்ற துவக்கவிழா
தருமபுரி, அக்.26-
தருமபுரி மாவட்டம் - ரியல் பவுண்டேசன், மற்றும் திருநெல்வேலி வான்முகில் தொண்டு நிறுவனம் இணைந்து 26.10.2021 அன்று காலை 10.30 மணி அளவில் அருளருவி பயிற்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமை கல்வி மாணவர் மன்ற துவக்கவிழா மாவட்ட அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செந்தில்ராஜா இயக்குநர் ரியல் பவுன்டேசன் அனைவரையும் வரவேற்று நெறியாழ்கை செய்தார். தலைமை உரை வழக்கறிஞர் பிரிட்டோ, கணேசன் நோக்க உரை ஆற்றினார்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.வெங்கடேஸ்வரன் குத்து விளக்கு ஏற்றி மாவட்ட தகவல் பலகை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, அரசமைப்பு உரிமை கல்வி இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும் . சட்டம் சார்ந்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டால் குற்ற செயல்கள் குறையும் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும். இதற்கு தமிழக அரசு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் எம்.சிவகாந்தி மற்றும் சரவணன் தலைவர் குழந்தைகள் நல குழுமம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.சரவணன், சிறார் நீதி குழும உறுப்பினர் கே.எஸ். ரவி மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் என்.சரவணன் மற்றும் ரங்கநாயகி. கிரைஸா மேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர் இந்நிகழ்வில் குழந்தைகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவன இயக்குநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சி இறுதியில் தனலட்சுமி நன்றியுரை கூறினார்

No comments
Thank you for your comments