கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, அக்.7-
தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை திறந்திருக்கும் போது வாரவிடுமுறை நாட்களில் கோயில்களை திறந்து சுவாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும், என்று தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள் முன் பாஜகவினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (07.10.2021-வியாழக்கிழமை) நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களில் அதிகமான பக்தர்கள் கூடுவர் என்பதால் இந்த 3 நாட்களில் கோயில்களை திறக்க அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முக்கிய விழா நாள்களிலும் கோயில்கள் திறப்புக்கு அனுமதி இல்லை.
முன்னதாக இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் திரையிட அனுமதிக்கின்றனர். இதைச் செய்யும் அரசு, எதற்காகக் கோயில்களை மட்டும் மூட வேண்டும்?. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறந்து இருந்தால், கூட்டம் ஒரே சீராக இருக்கும். எனவே, வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 7-ம் தேதி காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் முன்பு பாஜக சார்பில் அறப்போராட்டம் நடைபெறும். பக்தர்கள், கோயில்களை நம்பி இருப்பவர்கள், அறத்தின் வழி நிற்பவர்கள் எல்லோரும் இதில் கலந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் கோயில்களைத் திறக்குமாறு அரசை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கோயில் முன் இன்று (07.10.2021) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர், மகளிரணியினர் திரளானோர் பங்கேற்றனர்.
இன்று ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
இல்லாத கொரோனாவை காரணம் காட்ட வேண்டாம். திமுகவின் சித்தாந்தந்தங்களை எங்கள் பூஜை அறைக்கு கொண்டு வராதீர்கள். 10 நாட்களில் கோயில்களை திறக்காவிட்டால் சிறை செல்லவும் தயார்.
கோயில்களில் உள்ள நகைகள் தெய்வங்களுக்கு சொந்தமானவை அவற்றை உருக்கக்கூடாது. அந்த நகைகள் எங்கள் வீட்டு பெண்களும், ஆண்களும் உடல்நலமின்றி இருந்ததால் வேண்டுதலுக்காக காணிக்கையாக அளித்தவை. அதேபோல் குடும்பத்தினர் நலமாக இருக்கவும் நகைகள் கோயிலுக்கு வழங்கப்பட்டவையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் முன் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவில்களை திறக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தியதால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
🔥Also Read 👆 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு 👍
அதேபோல் கோவில்களை திறக்கக் கோரியும், கோவில் நகைகளை உருக்குவதைக் கண்டித்தும் தஞ்சை பெரிய கோவில் முன் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவில் எதிரே, ஹிந்து விரோத தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாமக்கலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகாமி பரமசிவம், வழக்குரைஞர் மனோகரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட பார்வையாளர் கோபிநாத், மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, கல்வியாளர் பிரணவ்குமார் ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
🔥Also Read 👆ஆள் கடத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் கேட்டு முறையீடு👍
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 12 இடங்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோயில்களை திறக்க வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் எப்போதுமே இதுபோன்ற போராட்டங்களை நடத்த தான் செய்யும். இந்த ஆட்சியை எதிர்த்து போராடுவதற்கு போதிய காரணங்கள் எதுவும் இல்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும், அவரது தலைமையிலான திமுக ஆட்சியின் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் பணிகள் மக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.
திமுகவுக்கு ஓட்டுபோட்டு இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்தவர்கள் மகிழ்கிறார்கள். திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள், வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று ஆதங்கப்படுகிறார்கள்.
கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தை தேடி சென்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதுவும் கோவில்கள் திறந்திருக்கும் நாளான இன்று போராட்டம் நடத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.
போராட்டம் நடத்தும் பா.ஜனதா கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இது நாங்கள் எடுத்த முடிவு அல்ல. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தான் இதை செய்கிறோம். எங்கெங்கெல்லாம் கூட்டம் கூடுமோ அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதை கருத்தில் கொண்டு தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் அதிக கூட்டம் கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்துமத கோவில்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மத கோவில்களுக்கும் இந்த கட்டுப்பாடு உள்ளது.
கொரோனா தொற்று குறைந்து பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிலை வரும்போது வாரத்தில் 7 நாட்களும் கோவில்கள் திறக்கப்படும். இதை முதலமைச்சரும் தெரிவித்துள்ளார்.
வணிகவளாகங்கள், பொது இடங்கள், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுகிறது. அவைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளதே என்கிறார்கள். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. அங்கு ஏதாவது பிரச்சனைகள் என்றாலோ, சமூக இடைவெளி கேள்விக்குறியானாலோ காவல்துறை மூலம் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் கோவில்களில் அப்படி செய்ய இயலாது. இப்போதும் கோவில்கள் முழுமையாக அடைக்கப்படவில்லை. 3 நாட்கள் தான் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனாலும் அந்த நாட்களிலும் கோவிலில் வழக்கமான பூஜைகள் செய்யப்படுகின்றன. எதுவும் தடங்கல் இல்லாமல் முறைப்படி நடந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Was part of @BJP4TamilNadu protest against the @arivalayam govt’s decision to not open our temples on all days
— K.Annamalai (@annamalai_k) October 7, 2021
When TASMAC, theatres and other commercial centres are open, why this approach to Temples? Is this their way of bringing their ‘No God’ ideology into our personal space pic.twitter.com/yPiQQAd9Yy
கோவில்கள் வெள்ளி சனி ஞாயிறுகளிலும் பக்தர்கள அனுமதிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டு அனைத்து நாட்களிலும் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ப்ராட்வேயில் மாநில தலைவர் திரு.@annamalai_k தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!#20yearsofSevaSamarpan pic.twitter.com/QxD4WscX20
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 7, 2021
இன்று கோவையில் அனைத்து நாள்களிலும் கோவில்களை திறக்கக் கோரி மற்றும் இந்து விரோத @arivalayam அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.@JPNadda @blsanthosh @BJP4TamilNadu @annamalai_k pic.twitter.com/OS3C5JX6zR
— Vanathi Srinivasan (@VanathiBJP) October 7, 2021


No comments
Thank you for your comments