தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அராஜகம்! - பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு...
தருமபுரி
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தன்னுடைய பினாமி பெயரில் வளைத்துப் போட திட்டம் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாகலஅள்ளி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் சுமார் 15 சென்ட் கிஞி கண்டிஷன் நிலம் உள்ளது. அப்பகுதியை ஒட்டி அருந்ததியர் காலனி உள்ளது. இந்த காலனியில் சொந்த வீடு இல்லாத 20 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர்.
இது தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகாமையில் உள்ளதால் இந்த நிலத்தின் மார்க்கெட் மதிப்பு நல்லம்பள்ளி தாசில்தாரின் கண்ணை உறுத்தியுள்ளது.கிராம நிர்வாக அலுவலர் புனிதா உதவியுடன் இந்த நிலத்தை பினாமி பெயரில் வளைத்துப்போட திட்டம் தீட்டிய தாசில்தார் இரண்டு முறை அந்தப் பகுதி மக்களுக்கு தெரியாத வண்ணம் பார்வையிட்டு அதனை அவருடைய பினாமியிலுள்ள நபருக்கு பட்டா போட்டுக் கொடுக்க திட்டம் தீட்டியதை தெரிந்துகொண்ட உள்ளூர் பொதுமக்கள் தாசில்தாரின் இந்த செயலை கண்டிக்க வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அங்கு மேற்கண்ட நிலத்தினை இந்த கிராமத்திற்கு சம்பந்தமில்லாத வேறு எவருக்கோ ஏன் பட்டா போட்டுக் கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு, தாசில்தார் செந்தில் மிரட்டும் தோரணையில் நான் எவருக்கு வேண்டுமானாலும் பட்டா போட்டுக் கொடுப்பேன். அதை கேட்பதற்கு உங்களுக்கு அருகதை இல்லை. மேலும், அனாவசியமாக எனது அலுவலகத்துக்கு நீங்கள் வரக் கூடாது எனவும், உள்ளே வந்தால் நன்றாக இருக்காது எனவும் ஆணவத்துடன் பேசியிருக்கிறார்.
இதனால், மேற்கண்ட நல்லம்பள்ளி வட்டாட்சியர் மீது சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் கோபத்தில் உள்ளதாகவும்... இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க தயாராக உள்ளனர். மாவட்டத்தில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி வரும் சூழ்நிலையில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் செந்தில் போல் சில அதிகாரியால் அரசுக்கும் பொதுமக்களிடமும் அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர்.
இதுபோன்ற அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா பொதுமக்களுடைய எதிர்பார்ப்பு... பொறுத்திருந்து பார்ப்போம்..

No comments
Thank you for your comments